India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,99,997 மோசடி செய்தனர். இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 199997 ரூபாய் பணம் மீட்கப்பட்டு நேற்று (மே 21) கார்த்திக்ராஜாவிடம் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஒப்படைத்தார்.
வேலூர் மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த பாண்டி, வெங்கடேசன், காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்குட்டுவன் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேரும் சேர்ந்து மற்ற கைதிகளை அடிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து சிறை நிர்வாகம் 3 பேரையும் வேறு பிளாக்குக்கு மாற்ற முடிவு செய்தது. இதையறிந்த 3 பேரும் நேற்று பணியில் இருந்த ஜெயிலர் அருள்குமரனை பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 21) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 89 மதுபாட்டில்கள், 55 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை காரணமாக குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு விறகு அடுப்பில் சமைப்பது கடினம் என்பதால், குடிசைகளில் வசிக்கும் குடும்பங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுவையான உணவுப் பொட்டலங்கள், குடிநீர் சமூக ஆர்வலர் தினேஷ் தலைமையில் வழங்கப்பட்டது. முதியோர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை கிராமத்தில் இன்று (மே 21) அதிகாலையில் காட்டு யானைகள் அங்குள்ள தோட்டத்திற்குள் புகுந்து 20 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று (மே.21) ஒரே நாளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் சுமார் 12:30 மணி அளவில் திடீரென சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம், வள்ளலார் , ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையில் நனைந்தபடி வாகன ஓட்டிகள் சென்றனர். மேலும் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் மின் துண்டிப்பை கண்டித்து வேதனை தெரிவித்து வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்து மின் துண்டிப்புக்கான காரணத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு உரிய தகவலை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மின் துண்டிப்புகள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (65), சலவை தொழிலாளி. இவர் 2 நாள்களுக்கு முன்பு குடியாத்தம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் கிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 20) உயிரிழந்தார்.
குடியாத்தம் எழில் நகரை சேர்ந்தவர் சத்யா (41). தலைவலி காரணமாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்ததால் உடல் உறுப்புகள் இருதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம்-மிற்கும், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், சிஎம்சி-க்கும், ஒரு சிறுநீரகம் அரியூர் நாராயணிக்கும் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.