Vellore

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

வேலூரில் ஒரே நாளில் 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூலை 16) நடத்திய சோதனையில் 22 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 700 கிராம் குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

வேலூர் மாவட்ட எஸ்பி தகவல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 16) நடத்திய சோதனையில் 22 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 700 கிராம் குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

எஸ்பி தலைமையில் பெண் குழந்தைகள் காப்போம் திட்டம்

image

வேலூர் மாவட்ட அலுவலகத்தில் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் இன்று (ஜூலை 16) பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் தரமான கல்வி, பாதுகாப்பு, பெண் சிசுக்கொலைகளை தடுப்பது, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை கையாளும் முறை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சமூக நல அலுவலர் உமா, காவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

வேலூர் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

முன்னாள் முதல்வர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 16) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் சபதம்!

image

வேலூர் மாவட்டம் பிரம்மபுத்திரம் தனியார் மண்டபத்தில் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நான் எங்கிருந்தாலும் காட்பாடி மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்றார். மேலும் தமிழ்நாட்டின் முதன்மைத் தொகுதியாக காட்பாடியை மாற்றிக் காட்டுவேன் என்று சபதம் செய்தார்.

News July 15, 2024

வேலூர் மாவட்டத்தில் நுழைந்த ஒற்றை யானை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றை தந்தம் கொண்ட யானை இன்று (ஜூலை 15) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா உட்பட்ட ஒடுக்கத்தூர் பகுதியில் நுழைந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News July 15, 2024

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை பெற்ற டிஆர்ஓ

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஜூலை 15) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!