Vellore

News July 18, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு: ஒருவர் கைது

image

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி வேலூர் எஸ்பி மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று (ஜூலை 17) உத்தரவிட்டார்.

News July 18, 2024

வேலூர் மாவட்டத்திற்கு 1,000 டன் நெல் முட்டைகள் வருகை

image

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு 1,000 டன் நெல் மூட்டைகள் நேற்று (ஜூலை 17) காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள வாணிப நுகர்பொருள் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது

image

வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் 45 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் வேலூர் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி. அருள்சாமி கலந்து கொண்டு அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது என்று பேசினார்.

News July 18, 2024

வேலூர் மாவட்டத்தில் 10 பேர் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 17) நடத்திய அதிரடி சோதனையில் 81 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

97 காவலர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் உதவி காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், முதல் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் காவலர் என மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய 97 காவலர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து இன்று (ஜூலை 17) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

News July 17, 2024

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

image

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த் 2வது முறையாக வெற்றி பெற்றதையடுத்து இன்று (ஜூலை 17) வேலூர் மாவட்டம் கேவி குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கே.வி. குப்பம் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 17, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில்<<>> வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!