India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் 33 பேரின் வங்கி கணக்குகளை முடக்கி அதில் ரூபாய் 24,949/- பணம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூலை 23) நடத்திய சோதனையில் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
காட்பாடி அடுத்த வள்ளிமலை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 23) காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்பாடி, வள்ளிமலை, பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ராமு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் பளு தூக்கும் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள வேலூர் மாவட்ட வீரர்களை தேர்வு செய்யும் போட்டி சத்துவாச்சாரி சதீஷ் சிவலிங்கம் பளு தூக்கும் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் 30 வீரர்கள் மற்றும் 30 வீராங்கனைகள் என 60 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், டர்னர், ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மெஷினிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு தொழிற் பிரிவுகளில் சேர நேரடியாக விண்ணப்பிப்பதற்கான காலம் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூரில் கலப்படம், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவுப்பொருள் பாக்கெட்களில் உற்பத்தி, பேக்கிங் தேதி, எடை, விலை குறிப்பிடாமல் விற்பது, மேலும், உணவு பொருட்களில் கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் நீர்நிலைகளில் குளித்த 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே வேலூரில் உள்ள குளம், குட்டை, ஏரி மற்றும் கல்குவாரிகளில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கனிம வளத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 22) உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ஜூலை 23-ஆம் தேதி அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, காட்பாடி, கே.வி. குப்பம் மற்றும் வேலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் மேல்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு கோபால் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது காவல் நிலையத்திற்கு உள்ளேயே (லாக்அப் டெத்) உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்எஸ்ஐ உமாசங்கர், இன்பரசன் ஆகிய 3 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று (ஜூலை 22) தீர்ப்பு வழங்கியது.
Sorry, no posts matched your criteria.