Vellore

News January 23, 2026

வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர் தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (ஜன.23) மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத்” கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

வேலூர் வேலைவாய்ப்பு முகாமில் 2786 பேர் தேர்வு!

image

வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட 11 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 401 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6,211 பேர் பங்கேற்றனர். அவர்களில் 39 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,786 பேர் தேர்வு செய்யப்பட்டு முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 23, 2026

வேலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

image

அமிர்தி உயிரியல் பூங்காவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக வனத்துறை மற்றும் தமிழக வன அனுபவ கழகம் சார்பில் ஒரு நாள் சிறப்பு முகாம் நேற்று (ஜன.22) நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், வனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News January 23, 2026

வேலூர்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

image

வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில் வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு 27,600 ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பார்வையிட்டு தொடர்ந்து இப்பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

News January 23, 2026

வேலூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

வேலூர் மாவட்ட மக்களே! இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. வரும் ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். இதை உடனே SHARE பண்ணுங்க!

News January 23, 2026

வேலூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா

image

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.23) வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வேலூர் நேதாஜி மார்க்கெட் தேச பக்தர்கள் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என விழா குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

News January 23, 2026

வேலூர்: கல்யாண சான்று ONLINE விண்ணப்பம் – LINK!

image

வேலூர் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

வேலூர்: தவறான ஊசியால் பறிபோன உயிர்!

image

ஒடுகத்துாா் பேரூராட்சி ஓ.ராஜாபாளையத்தை சோ்ந்த பழ வியாபாரி சீனிவாசன் (27). இவர் கடந்த 16-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக ஒடுகத்தூரில் உள்ள தனியாா் கிளினிக்குக்கு சென்றார். மருத்துவா் இல்லாததால் மருத்துவரின் சகோதரா் இவருக்கு 2 ஊசி போட்டுள்ளார். பின் மயங்கிய இவர், சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஜனவரி 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News January 23, 2026

வேலூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்!

image

சத்துவாச்சாரி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சத்துவாச்சாரி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

வேலூர் காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஜனவரி 22 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!