India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் புறநகர் மாவட்டம் சார்பில், மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.25) இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மு.அமைச்சர், அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் T.K.M.சின்னையா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பக்காலப்பல்லியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் நேற்று (ஜன.25) ரசாயன பொருட்கள் கலக்கப்பட்ட இயந்திரத்தை தொழிலாளர்கள் திறந்தனர். அப்போது அதிலிருந்து கசிந்த விஷ வாயு தாக்கி ஷேக் அலி (60), ஜமால் பாஷா (41) ஆகிய இருவரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளனா். உமா் ஆபாத் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நேற்று (ஜன.25) மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைக்கட்டு MLA நந்தாகுமார் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் வேலூர் மாநகரச் செயலாளர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V.அமுலு விஜயன், மாநகராட்சி மேயர்.A.சுஜாதா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.26) வேலூர் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அனைவருக்கும் இந்திய நாட்டின் 77-வது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என சமூக வலைத்தள வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் விழிப்புணர்வுடன் இருப்போம், விபத்துக்களைக் குற்றங்களையும் தவிர்ப்போம், வலிமையான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உறுவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.

வேலூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்:
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் வேலூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0416-2252025 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாநகராட்சியினர் நேற்று (ஜன.25) நகரின் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் மொத்தம் ரூ.27,600 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி பகுதியில் உள்ள மருந்து கடை உரிமையாளர் நேற்று (ஜன.25) கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் முபாரக் (26). இவர் தனது நண்பர் வசந்த்துடன் நேற்றிரவு பாகாயத்திற்கு வந்தனர். அங்கு நின்றிருந்த ஒருவரிடம் முபாரக் தனது நண்பர் குறித்து விசாரித்து அவருடன் நண்பரை பார்க்க நம்பிராஜபுரம் மலையடிவாரம் சென்றார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் கத்தியை எடுத்து முபாரக்கை வெட்டினார். இதுகுறித்து பாகாயம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.