Vellore

News February 24, 2026

வேலூரில் பயங்கர தீ விபத்து!

image

காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த மகிமண்டலம் காப்பு காடு பகுதியில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. செடி, கொடி, மரம், புற்கள் தீப்பற்றி மள மளவென எரியத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. ஆண்டுதோறும் வெயில் காலங்களில் மலைகளுக்கு தீ வைக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 24, 2026

வேலூர் மாவட்ட காவல்துறையினர் விளக்கம்!

image

வேலூரில் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 22 மணி நேரத்திற்கு முன்புதான் காவல்துறை அனுமதி வழங்கியதாக தவெக கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு, ‘எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது’ என தேதி வாரியாக குறிப்பிட்டு மாவட்ட காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தவெக கூறுவது உண்மைக்கு மாறானது என மறுத்துள்ளனர்.

News February 24, 2026

வேலூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி (23). இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பூபதி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News February 24, 2026

காட்பாடி: மனைவியின் காதலனுக்கு கத்திக்குத்து!

image

காட்பாடியைச் சேர்ந்தவர் கமல் (33). இவரது மனைவி தனலட்சுமி (30). இருவரும் 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். அப்போது சின்னத்துரை-உடன் (31) தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கமல், தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கமல், சின்னத்துரையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 24, 2026

வேலூர் மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

image

வேலூரில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (பிப்-23) இரவு – இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர்!

News February 23, 2026

வேலூர் : பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

வேலூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

வேலூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு

image

வேலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு க்ளிக் செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.!

error: Content is protected !!