India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் இன்று (பிப்.25) நடந்தது. துணை காவல் கண்காணிப்பாளர்கள் சின்னராஜ் , (CWC) மற்றும் ரவீந்திர பிரகாஷ் (SJHR) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 31 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், 2026-லும் முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிந்த புனிதத் தலமாகத் திகழ்கிறது. இத்தலம் திருமணத் தடைகளை நீக்கி, கர்ம வினைகளைத் தீர்க்கும் மகாசக்தி கொண்டது. சித்தர்கள் தவம் புரிந்த இக்குகைக்கோயில், பக்தர்களுக்குப் பேரமைதியையும் காரிய வெற்றியையும் வழங்குகிறது.

வேலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக்<

வேலூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7,134 மாணவர்கள், 8,522 மாணவிகள் என மொத்தம் 15,656 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை மையங்களை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

வேப்பங்குப்பம் அருகே குறவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த நந்தினி (35) என்பவரின் வீட்டுக்கு நேற்று 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவரிடம் நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். அவர் மறுத்த நிலையில், அவரிடம் ஒரு மர்மப் பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்பாடியை சேர்ந்த நடராஜ் (69), பார்வை குறைபாடுடைய இவர் நேற்று சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க ஒரு வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உதவி செய்வது போல் நடித்து போலி ஏடிஎம் கார்டை நடராஜிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். வாலிபர் சென்ற அடுத்த 5 நிமிடத்தில் ரூ.20,800 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அணைக்கட்டு அருகே உள்ள கந்தனேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தண்டபாணி (60). இவர் முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பழைய சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மேலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் காவல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.