India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
▶️விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் ▶️அல்லது <

வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (பிப்.27) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்டத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அரசு பொதுத்தேர்வு தொடர்பான துறைசார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்

வேலூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

வேலூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிகளை கண்காணிக்க சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகனை இணை கண்காணிப்பாளராக நியமித்து தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

அரசமரப்பேட்டையைச் சேர்ந்த வங்கி ஊழியர் யோகானந்தம் (63), தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்நிலையில், மகள் ரகசிய திருமணம் செய்துகொண்டது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த மனைவி விமலாதேவி, மகன் கோவிந்தராஜ் மற்றும் மகளின் தோழி உட்பட 5 பேர் சேர்ந்து யோகானந்தத்தைத் தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் காட்பாடிக்கு வந்த ரயிலில் சோதனை செய்தனர். அப்போது கேட்பாரற்று கிடந்த பையில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை 27-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.