Vellore

News March 1, 2026

வேலூரில் கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 25 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் தேர்தல் பிரிவு தாசில்தார் சத்திய மூர்த்தி வேலூர் தாலுகா கோட்ட கலால் அலுவலராகவும், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவி குடியாத்தத்துக்கும் இதேபோல் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 1, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் (பிப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 28, 2026

வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, வேலூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE .பண்ணுங்க.

News February 28, 2026

வேலூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

வேலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>https://<<>>pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

வேலூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 28, 2026

வேலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

அணைக்கட்டு சாலை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (பிப்.28) அணைக்கட்டு வட்டம், குருவராஜபாளையம் ஊராட்சி, பூலாங்குட்டை சாலை முதல் தர்ம கொண்ட ராஜா திருமலை திருக்கோயில் வரை ரூ.1.68 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் உட்பட பலர் உடனிருந்தனர்.

News February 28, 2026

வேலூர்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, வேலூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News February 28, 2026

வேலூரில் நிலத்தகராறில் பரபரப்பு!

image

பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியை சேர்ந்தவர் வேங்கடேசன் இவரது மகன்கள் திருவேங்கடம் வயது 50, மணிகண்டன் வயது 43 இவர்கள் இருவருக்கும் கடந்த 22 ஆம் தேதி அன்று நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி மணிகண்டன் அவரது அண்ணனை தாக்கியுள்ளார் இதுகுறித்து திருவேங்கடம் கொடுத்த புகார் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை இன்று கைது செய்தனர்.

News February 28, 2026

வேலூரில் கோரா தீ விபத்து!

image

வேலூர் அடுத்த ஓட்டேரி ஏரி அருகே பாலமதி மற்றும் நாயக்கனேரி செல்லும் ஊர்களுக்கு இடையே மலை உள்ளது. இந்த மலைக்கு நேற்றிரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அந்த தீ மளமள என்று பரவியது. இதனால் மலையில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது. மலைக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!