India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஏற்பாட்டின் பேரில் வரும் ஜன.10 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE பண்ணுங்க
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் துணை நிர்வாக நலன் கருதி, கயத்தாறு மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர்-2 சங்கரநாராயணன், ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், கயத்தாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரேவதி ஆகிய 4 பேருக்கும் வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று(ஜன.,6) உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட தன்னார்வ அலுவலர்களுடன் TNPSC குரூப்-4 இலவச பயிற்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். குரூப்-4 தேர்வுக்கான அறிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என TNPSC அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்ப இலவச பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் மாதிரி தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பு படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று(ஜன.5) பள்ளியில் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 பேர் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கௌரவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு வெளிமான் சரணாலயம். 1,641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கு, வெளிமான்களைத் தவிர புள்ளி மான்கள், மிளா, குள்ளநரி, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, முயல்கள், கீரி, பாம்பினங்கள், தேள் வகைகள் காணப்படுகின்றன. வல்லநாடு சரணாலயத்தில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கனிமொழி எம்.பி. தனது சகோதரரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அதைப்போல முதலமைச்சர் துணைவியார் இடமும் கனிமொழி எம்.பி. தனது பிறந்த நாளை ஒட்டி ஆசி பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன05) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
தொழில் நகரமான தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் என்ற ஒரே ஒரு ரயில் மட்டும் இயங்கி வருகிறது. இந்த ரயிலில் எப்போதும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதில் தூத்துக்குடிக்கு ஒரு ரயில் கூட அறிவிக்கப்படாததற்கு ரயில் பயணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி அவரது தந்தை கருணாநிதி போலவே பன்முகத் தன்மை கொண்டவர். இலக்கியம், கவிதை, எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்று இவரது திறமை நீண்டு கொண்டே போகும். அரசியலைப் பொறுத்தவரை திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் நாடாளுமன்ற குழு தலைவராகவும் உள்ளார். சென்னை சங்கமம், நெய்தல் கலை விழா நடத்தி புகழ் பெற்றவர். இத்தகைய திறமை பெற்றவரின் பிறந்தநாள் இன்று(ஜன.5).
தூத்துக்குடி மாநகராட்சி சாலைகளில் கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்து வருகின்றன. இது தொடர்பாக மாநகராட்சி பலமுறை கால்நடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இனி அவ்வாறு சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் கூடுதல் அபராதம் விதிப்பதோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.