India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகல் 1.55 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டத்தை சொந்த ஊராக கொண்ட நல்லகண்ணு பொதுவுடைமை கட்சியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 1949-ம் ஆண்டு இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது போலீசார் இவரது மீசையை பொசுக்கியும் முடிகளை சிதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிலிருந்து நல்லகண்ணு தனது மீசையை துறந்து மீசை வைப்பதை விட்டு விட்டார் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925-ம் ஆண்டு ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் தமிழக அரசின் தலைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.தற்போது இவரது மறைவால் ஸ்ரீவைகுண்டம் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் நாளை (பிப்.26) காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2026 – 27 ஆம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், குடிநீர் கல்வி போன்றவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளுக்கு ஒப்புதலும் இந்த கூட்டத்தில் பெறப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரரும், கம்யூ;கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு (101) சென்னையில் காலமானார். பிப்.1ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சுத்திணறல் & நுரையீரல் தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று நாட்கள் பயிற்சி வரும் 28ஆம் தேதி புதுகிராமத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்த இருபாலரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற கூட்டு விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ காப்பீடாளர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <

நாலாட்டின்புத்தூர் அருகே முடுக்குமீண்டான்பட்டி சேர்ந்த பேச்சியம்மாள்(82), தனியே வாழ்ந்து வந்தார். நடக்க முடியாத நிலை & உதவி இல்லாததால் விரக்தியடைந்த அவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே தீயை அணைத்தாலும், அவர் உயிரிழந்தார். நாலாட்டின்புத்தூர்போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி GH-க்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். (இவருக்கு மகன்கள் உள்ளனர்)
Sorry, no posts matched your criteria.