India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்கள், 7,04,689 பெண் வாக்காளர்கள் மற்றும் 193 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில், மொத்தம் 960 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0461-2335111
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

தூத்துக்குடி தெற்கு காலாங்கரையை சேர்ந்தவர் இளைஞர் பெரியநாயகம். இவருக்கு மனைவி, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். நேற்று தனது உறவினர்களுடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில், ஈராலில் சேவு வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, உறவினர் இருவருடன் ஏற்பட்ட தகராறில், இருவரும் சேர்ந்து பெரியநாயகத்தை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (57) கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் பைக்கில் பேய் குளத்திற்கு வந்துவிட்டு திரும்பியபோது, பழனியப்பபுரம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (57) கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் பைக்கில் பேய் குளத்திற்கு வந்துவிட்டு திரும்பியபோது, பழனியப்பபுரம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவடி தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் – முத்துசெல்வி தம்பதியின் 2 வயது மகன் கபிலேஷ் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி ஒருவர் கடத்தி சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் 20 நிமிடத்தில் குழந்தையை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட லிங்கதுரை – ஜெயந்தி தம்பதியினரை கைது செய்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.