India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜ்குமார் கோவையில் மெத்தபெட்டமின் விற்றபோது கைது செய்யப்பட்டார். இவர் திசையன்விளையை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என இன்று (ஜன.7) போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இருந்து நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதை தொடர்ந்து,தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து ஆளுநர் வஞ்சித்து வருவதாக பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதை கண்டித்து தமிழகமெங்கும் இன்று திமுக போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து, தூத்துக்குடி – பாளை ரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம், விமன் சேவா டிரஸ்ட் ஆகியவை இணைந்து வரும் 10ஆம் தேதி காமராஜ் கல்லூரியில் வைத்து 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான, கிராமத்து பொங்கல் விழா மற்றும் போட்டிகள் நடத்த உள்ளனர். இதில் கோலப்போட்டி, உறியடி, கயிறு இழுத்தல், வட்டக்கல் தூக்குதல், கிராமத்து அலங்காரம் போன்ற போட்டிகளும் நடைபெற உள்ளன.
தைப்பொங்கலை முன்னிட்டு ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் காவடி சுமந்து, அலகு குத்திக்கொண்டும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இதில் நடைபாதையில் சில இடங்களில் குப்பைகள், கற்கள் மற்றும் முற்செடிகள் உள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன06) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 11 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கு ஒன்பது வார கால பயிற்சி அளிக்கப்பட்டது. சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை இன்று கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருதிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள் <
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இந்த நிதியாண்டு 2024-25 டிசம்பர் 2024 வரை 1,869 காற்றாலை இறகுகளை கையாண்டு, கடந்த நிதியாண்டு இதே மாதம் கையாண்ட அளவான 1,332 காற்றாலை இறகுகளை விட அதிகமாக கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டு 40% வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஏற்பாட்டின் பேரில் வரும் ஜன.10 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE பண்ணுங்க
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் துணை நிர்வாக நலன் கருதி, கயத்தாறு மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர்-2 சங்கரநாராயணன், ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், கயத்தாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரேவதி ஆகிய 4 பேருக்கும் வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று(ஜன.,6) உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.