India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை ஜன. 25 தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காலை 10.00 மணியளவில் 13-17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், தமிழ் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆத்தூரில் நேற்று ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தங்கள் உயிரை பணயம் வைத்து கயிறு கட்டி ஆற்றில் இறங்கி ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவலர்கள் முனியசாமி விக்னேஷ் ஆகியோர் காப்பாற்றினர். இவர்களை இன்று சென்னையில் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 28.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் 5.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் வைத்து நடைபெற உள்ளது” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் இன்று (24.1.25) தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி – திருச்செந்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சேதமானது.இச்சாலை தற்போது வரை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த அஜய் சீனிவாசன் பணி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய மாவட்ட வருவாய் அதிகாரியாக அ.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக ரவிச்சந்திரன் இன்று கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, ஈஎஃப்ஐ(Environmental Foundation of India) மற்றும் வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் இணைந்து முத்துநகர் கடற்கரையில் நேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கடற்கரை தூய்மை பணியை மேற்கொண்டனர். 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முத்து நகர் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி நேற்று(ஜன.23) தனது முகநூல் பக்கத்தில், “அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசு. இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றத்திற்கும், மக்கள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி. இனியாவது மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களையும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய அரசு முன்னெடுக்காமல் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, உரிய தகுதி பெற்ற இணைகளுக்கு 4 கிராம் தாலி, ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருள்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. விருப்பமுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதி உடைய இணைகள் வரும் பிப்.3ஆம் தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் பதிவு செய்ய கேட்டுள்ளார். SHARE IT.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இன்று மாவட்ட பசுமை குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் மற்றும் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிரீன் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வன அலுவலர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பங்களா தெரு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (72). இவர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வேனில் கிளீனராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் பள்ளிக்கு வேனில் வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருப்பதியை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.