Tuticorin

News March 10, 2026

தூத்துக்குடி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம்.

News March 10, 2026

தூத்துக்குடி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

News March 10, 2026

தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News March 10, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு பாதுகாப்பில்லை – சௌமியா

image

தூத்துக்குடி விமான நிலையத்தில் சௌமியா அன்புமணி (பாமக) செய்தியார்களை சந்தித்தார். அதில், பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முன்பு பெரியவர்கள் தான் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர். இப்போது சிறுவர்கள் கூட இக்குற்றத்தில் ஈடுபடும் அவலநிலை நிலவுகிறது என அவர் தெரிவித்தார்.

News March 10, 2026

தூத்துக்குடி: மருமகனை கொலை செய்த மாமனாருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி கே வி கே சாமி நகரை சேர்ந்தவர் ஹரிகுமார். இவரை கடந்த 2018 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணா நகரை சேர்ந்த இவரது மாமா சுப்பிரமணியன் சத்தியநாராயணன் என்பவருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் சத்யநாராயணனை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News March 10, 2026

தூத்துக்குடியில் வாலிபர் தற்கொலை முயற்சி…!

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் சார்ந்தவர் வாலிபர் கார்த்திக் ராஜா குடிப்பழக்கம் இவருக்கு இருந்து வந்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிப்பழக்கத்தை கைவிட குடும்பத்தினர் கூறியதால் இன்று வீட்டில் இருந்த எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுக்குறித்து கிழக்கு போலீசார் விசாரணை.

News March 10, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஹலோ போலீஸ் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (09.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News March 10, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஹலோ போலீஸ் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (09.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News March 9, 2026

தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<> இங்கு க்ளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!