India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.4,300 கோடி மதிப்பில் தொழிற்சாலை பணியை தொடங்கி, இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆகஸ்டு மாதத்திற்குள் வி.எப்.7, வி.எப்.6, எஸ்.யூ.வி. ரக மின்சார கார்களை தயாரித்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.ஒப்பந்தம் கையெழுத்தான ஒரே ஆண்டில் வேலை வழங்க தயாராகியுள்ளதால் இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அனைத்து பள்ளிகளில் நண்பகல் உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் நண்பகல் உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே எட்டயபுரத்தில் மன்னர் எட்டப்ப ராஜா பெயரில் செயல்பட்ட ராஜா இலவச ஆரம்ப பாடசாலையில் தான் 1956 ஆம் ஆண்டு நண்பகல் உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவும் மன்னரின் பொருள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.
ஆறுமுகநேரி அருகே உள்ள குரும்பூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது சம்பந்தமாக தொடர்பாக போலீசார் இவரை போக்சோவில் கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கில் நேற்று கருப்பசாமிக்கு 5 வருடம் சிறை, ரூபாய் 5000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 83 இன்ஸ்பெக்டர்கள் டி எஸ் பி யாகபதவி உயர்வு அளித்து தமிழக காவல்துறையின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டம் கருமலை கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக இருந்த தங்கவேல் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் குற்றப்பிரிவு ஆவண காப்பக டி.எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கனிமொழி எம்பி இன்று முகநூல் பக்கத்தில், “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து விரட்டிச் சென்று அச்சுறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்; அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என நினைப்பவர் முதல்வர்” என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன30) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனம், கப்பல் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வெல்டர், எலக்ட்ரீசியன் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக பிப்.10ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கோரம்பள்ளம் பயிற்சி பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் இளைஞர்கள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். *உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்*
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலக்ஷ்மி பெண்கள் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பங்கேற்று பேசுகையில், “உங்களின் கல்வி கனவு என்னும் பயணத்தில் யாருக்காகவும், எப்போதும் அதை விட்டுவிடாதீர்கள் என்பதை தான் தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினர்; தந்தை பெரியாரை தாண்டி ஒரு பெண்ணியவாதியை நான் படித்தது இல்லை; பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்” என்றார்.
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேதுராமலிங்கம் தலைமையில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் இன்று தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில் கடந்த 2020ல் 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேலின் வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று (ஜன29) சக்திவேலுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை & ரூ6,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்
Sorry, no posts matched your criteria.