India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட அவுரி இலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்த இலைகளை பதப்படுத்த தூத்துக்குடியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட அவுரி கிட்டங்கிகள் இருந்தன. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வந்தனர். தற்போது அவுரிக்கு உரிய விலை கிடைக்காததால் அவுரி விவசாயம் பெரும்பாலும் நிறுத்தப்பட்டு விட்டது.

சாத்தான்குளம் அமுதுண்ணாக்குடி பகுதி சேர்ந்தவர் சந்துரு(20). இவர் நேற்று இரவு சாத்தான்குளத்தில் உள்ள பேச்சியப்பன் என்பவர் வீட்டில் சம்பளம் வாங்க வந்ததாக தெரிகிறது. அப்போது அங்குவந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கொடூரமாக வெட்டிவிட்டு தலைமறைவானது. இதில் பலத்த காயமடைந்த சந்துரு சம்பவ இடத்தை உயிரிழந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் செய்து தலைமறைவான ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் நேற்று முதன்மை கல்வி அலுவலரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில் பொதுத் தேர்வில் உடல் நலிவுற்றோர் மற்றும் நிகழாண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு பொதுத் பொது தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த பத்து மாதங்களில் மட்டும் 597 பேர் தெரு நாய் கடித்து கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். *உங்கள் பகுதிகளிலும் நாய் தொல்லை இருந்தா சொல்லுங்க மக்களே?
தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் நேற்று முதன்மை கல்வி அலுவலரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில் பொதுத் தேர்வில் உடல் நலிவுற்றோர் மற்றும் நிகழாண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு பொதுத் பொது தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (பிப்.06) ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், ‘மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியை இன்று சந்தித்து, நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், ‘இரும்பின் தொன்மை – தமிழ்நாட்டின் சமீபத்திய கதிரியக்கக் காலக்கணக்கீடுகள்’ புத்தகத்தையும், முதல்வரின் கடிதத்தையும் வழங்கினேன்’ என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு மர்ம நபர்கள் சிலர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து உங்களுக்கு ஸ்காலர்ஷிப் வந்துள்ளது என மோசடியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. எனவே இதனை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தனி பிரிவு காவலர்களாக 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர்கள் 49 பேர் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதன்படி தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்த ஆனந்த கிருஷ்ணகுமார் சிப்காட் காவல் நிலையத்திற்கும், சிப்காட்டில் இருந்த கலைவாணன் தாள முத்து நகர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.