Tuticorin

News March 1, 2025

இந்தி விவகாரம்: தூத்துக்குடி எம்பி முன் வைத்த கேள்வி

image

மும்மொழி கொள்கை சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சியினருக்கும் திமுகவினருக்கும் கடும் விமர்சனங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க வேண்டும் என்பதற்கான தர்க்கரீதியான காரணத்தை யாராவது தர முடியுமா?” என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

News March 1, 2025

தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (பிப் 28) அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான, ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார்.

News February 28, 2025

தூத்துக்குடி TO தமிழ்சினிமா; மகா நடிகனை பற்றி தெரிச்சிக்கோங்க

image

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி-க்கு நம்ம தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தான் சொந்த ஊர். அங்குள்ள ஜி.வி.என் கல்லூரியில் தான் பயின்றுள்ளார். நாடக கலைஞராக அறியப்பட்டவர், 1983-ல் கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் அறிமுகமாகி 800 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கோவில்பட்டியில் பிறந்து கோலிவுட்டில் கலக்கும் நம்ம சார்லி நமக்கு பெருமைதானே மக்களே! SHARE IT

News February 28, 2025

தூத்துக்குடியில் 70 பேர் மீது நடவடிக்கை

image

மத்திய அரசின் மோட்டார் வாகன விதிகள் திருத்த சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து விதி மீறலுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அபராத கட்டணம், லைசன்ஸ் தற்காலிக ரத்து போன்ற நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடியில் கடந்த ஒரு மாத காலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 70 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

News February 28, 2025

தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

காற்று சுழற்ச்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(பிப்.28) தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் இந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News February 28, 2025

இன்றைய தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (பிப்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 27, 2025

தூத்துக்குடி: தமிழ்சினிமாவின் முதல் பாடலாசிரியர் யார் தெரியுமா?

image

தமிழ்சினிமாவின் முதல் திரைப்பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ்(1892 – 1952) ஆவார். வெள்ளைச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ராம்நாடு மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைகவிஞராக இருந்ததால் இப்பெயர் பெற்றார். 1931-ல் வெளியான முதல் பேசும் படமான காளிதாஸில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவரே. நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் தான் இவர் பிறந்த ஊர். *நம்ம ஊருகாரரின் பெருமைய நாம தான SHARE பண்ணணும்

News February 27, 2025

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை ரூ.22.40 கோடியில் சீரமைப்பு 

image

தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையேயான சுமார் 40 கி.மீ தூரம் கொண்ட இச்சாலை, கடந்த 2021-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. குண்டும் குழியுமான இந்த சாலை தொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையில், முதல்கட்டமாக ரூ.22.40 கோடி மதிப்பில் தூத்துக்குடி டூ முக்காணி வரையிலான 17 கி.மீ வரை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

News February 27, 2025

ஸ்டெர்லைட் ஆலை பொருள்களை அகற்ற அரசு அனுமதி

image

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் நேற்று சந்தித்து பேசினாா். இதன் பின்னர் செய்தியாளா்களை சந்தித்த போராட்டக் குழுவினா் கூறியது, ஸ்டெர்லைட் ஆலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இருக்கக் கூடிய பொருள்களை அகற்றுவதற்கு ஸ்டெர்லைட் நிா்வாகம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளனா். அதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என்றனர்.

News February 27, 2025

கோவில்பட்டியில் 11.50 மில்லி மீ மழை பதிவு!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதன்படி நேற்றிலிருந்து இன்று காலை 6 மணி வரை கோவில்பட்டியில் 11.50 மில்லி மீட்டர் மழையும், ஒட்டப்பிடாரத்தில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று(பிப்.26) பரவலாக 36.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!