Tuticorin

News March 5, 2025

முதல்வர் மருந்தகம்: அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

image

பொதுமக்கள் நலன் கருதி தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி  முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 3 இடங்களில் இந்த மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து மருந்துகளும் 25% தள்ளுபடியில் கிடைப்பதுடன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மாத்திரைகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் கீதா ஜீவன் வேண்டியுள்ளார்.

News March 5, 2025

தூத்துக்குடியில் ‘சைபர் ஹாக்கத்தான்’ – ரூ.1.50 லட்சம் பரிசு

image

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ‘சைபர் ஹாக்கத்தான்’ போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை நேற்று(மார்ச் 4) அறிவித்துள்ளது. இதற்காக ‘QR code’ அல்லது ‘LINK’ மூலம் விண்ணப்ப செய்ய மார்ச் 9ஆம் தேதிதான் கடைசி நாளாகும். SHARE IT.

News March 5, 2025

தென்னிந்திய பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பள்ளி இதுதான்!

image

நாசரேத்தில் உள்ள தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளிதான் தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளியாகும். இந்திய அளவில் துவங்கப்பட்ட 3வது பெண்கள் பள்ளி. 1820ஆம் ஆண்டு அருள் திரு ஹோக் என்பவர் இந்த பள்ளியை துவங்கினார். 1877 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளியும் நிறுவப்பட்டது. பெண் கல்வியின் அவசியத்தை தமிழகத்திற்கு உணர்த்திய பெருமை இப் பள்ளிக்கு உண்டு. SHARE IT.

News March 4, 2025

இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News March 4, 2025

காவல்துறை குறை தீர்ப்பு கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.அந்த வகையில் நாளை (5) நடைபெற உள்ள குறை தீர் கூட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் புகார்கள் திடர்பாக மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

தூத்துக்குடி மக்களை சுண்டி இழுக்கும் தம்மடை

image

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் தயாரிக்கப்படும் தம்மடை அலாதி சுவையானது. பணியாரம் போன்று காட்சியளிக்கும் தம்மடை ரவை, சீனி, தேங்காய் பால், முந்திரிப்பருப்பு பாதாம், பிஸ்தா ஆன கலவையை அச்சில் வைத்து குறிப்பிட்ட வெப்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் மணம் ஆளை சுண்டி இழுக்க கூடியது. மிதமான சூட்டில், இதை சாப்பிட்டால் கணக்கே இல்லாமல் இறங்கும். ‘இன்னும் சாப்பிடலைன்னை உடன் காயலுக்கு வண்டிய விடுங்க’ SHARE IT

News March 4, 2025

விவசாயிகள் நில உடமை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் கிராமங்கள்தோறும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு இம்மாதம் 15ஆம் தேதி என இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 4, 2025

ஹெட்போன் ஆபத்து: தூத்துக்குடி மருத்துவர் விளக்கம்

image

தூத்துக்குடியில் நேற்று(மார்ச் 3) நடைபெற்ற உலக செவித்திறன் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற தூத்துக்குடி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் செந்தில் சுனிதா, ஒரு நாளைக்கு 80 டெசிபல் ஒலியை மட்டுமே நாம் உணர வேண்டும். அதைத் தாண்டி நாம் ஹெட்போன் போன்றவைகள் அதிக நேரம் பயன்படுத்தும்போது நமது செவித்திறன் பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

News March 4, 2025

விவசாயிகள் நில உடமை பதிவு – மார்ச் 30 வரை அவகாசம்

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் கிராமங்கள்தோறும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு இம்மாதம் 15ஆம் தேதி என இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 4, 2025

திருச்செந்தூர்: பெரிய பல்லக்கில் அஸ்திரதேவர் உடன் பெலி நாயகர்

image

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதலாம் திருநாளான நேற்று(03-03-2025) இரவு ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரதேவர் உடன் பெரிய பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளி 9 சன்னதிகளிலும் பெலி செய்து பக்தர்களுக்கு திருக்காட்சிளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!