India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் பிப்ரவரி மாதம் வரை 72 லட்சத்து 91 ஆயிரத்து661 யூனிட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது. இந்த மின்சக்தி துறைமுகத்தில் உள்ள 5 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி நிலையம் 1.04 மெகாவாட் கூரை மின்உற்பத்தி நிலையம் மூலம் பெறப்பட்டது. இதன் மூலம் 59 லட்சம் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைத்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட்.
தென் மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர மழை மேகங்கள் உருவாகி வருகின்றன. தென் மாவட்ட உள் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் தற்போது கனமழை பெய்ய துவங்கியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் மழையின் தாக்கம் மேலும் தீவிரம் அடையும் என தூத்துக்குடி வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவை., அருகே 11ஆம் வகுப்பு மாணவன் கெட்டியம்மாள்புரம் பேருந்து நிறுத்தம் அருகில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மாணவரை தாக்கிய லெட்சுமணன் என்பவனையும், 2 இளஞ்சிறார்களையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தியாகவும், பாதிக்கப்பட்ட மாணவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப்-1 தேர்வுகள் நடைபெற உள்ளதையொட்டி, இதற்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நாளை(மார்ச் 12) தொடங்க உள்ளது, இதில் பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். விருப்பமுள்ளோர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்துகொள்ள ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(மார்ச் 11) பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. *1071 & லேண்ட்லைன் – 0461 2340101 & அலைபேசி- 94864 54714, 93840 56221* இதில் புகார்கள் மற்றும் உதவிகள் குறித்து கேட்டறியலாம். இது குறித்து தெரியாத உங்க நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(மார்ச் 11) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவைக்காக தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் 94864 54714 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மழை மற்றும் பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.. *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் இன்று (10.03.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் “இன்றும் (11) நாளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது; எனவே இந்த 2 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம்; நீர்நிலைகள் அருகே தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்; மேலும் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வரும் மார்ச் 30-ம் தேதி முதல் ஒரு நாளைக்கு தினமும் 2 முறை சென்னை – தூத்துக்குடி என சேவைகளை தொடங்க உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் மொத்தம் 7 விமானங்கள் தினசரியாக இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.*விமானத்தில் செல்லும் நண்பர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.