Tuticorin

News January 7, 2026

தூத்துகுடியில் 750 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th, டிகிரி தகுதி…

image

தூத்துக்குடி மக்களே, கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன.9ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10, 12, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 10 நிறுவனங்கள் 750க்கும் மேலான காலியிடங்களை அறிவித்துள்ளன. மேலும் விவரங்களுக்கு 9677734590 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த நல்ல தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 7, 2026

தூத்துக்குடிக்கு பொங்கல் பரிசாக ரூ.162 கோடி!

image

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5,41,007 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 162 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE

News January 6, 2026

தூத்துக்குடி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

image

தூத்துக்குடி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> இங்கே கிளிக்<<>> செய்து அனைத்து சேவைகளையும் பெறலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களது நண்பர்களுக்கு Share பண்ணுங்க.

News January 6, 2026

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து தூத்துக்குடியில் ஜன.9 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமினை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று நடைபெறும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 09.01.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

தூத்துக்குடி: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தூத்துக்குடி மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

தூத்துக்குடி: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தூத்துக்குடி மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

தூத்துக்குடிக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. இதனை உடனே சீர் செய்ய தூத்துக்குடி மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணை (18002030401) அறிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மற்ற பல்வேறு அடிப்படை புகாரினையும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.

News January 6, 2026

தூத்துக்குடி: மாணவி கழுத்தை நெரித்து படுகொலை

image

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 6, 2026

தூத்துக்குடியை சேர்ந்த நபர் அடித்துக் கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின். இவர் நெல்லை சீவலப்பேரியை அடுத்த தோனி துறை பகுதியில் இன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!