Tuticorin

News January 8, 2026

தூத்துக்குடி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

image

காடல்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கருமுருகன் (25). இவர் விளாத்திகுளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 9 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கருமுருகனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 8, 2026

தூத்துக்குடி: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் ஜன.09க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 8, 2026

தூத்துக்குடியில் 7 1/2 லிட்டர் கஞ்சா எண்ணெய் பதுக்கல்!

image

போதை பொருள் நடமாட்டதை தடுக்க தூத்துக்குடி நகர சரக துணை போலீஸ் எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், கோயில்பிள்ளைவிளை, ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 7 1/2 லிட்டர் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மரியநவமணி ஸ்மைலன் (37), மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 8, 2026

தூத்துக்குடிக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வண்டி எண்: 06151 என்ற இந்த ரயிலானது ஜன.12 மற்றும் 19ம் தேதி சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.15க்கு தூத்துக்குடிக்கு வரும். 06152 என்ற ரயிலானது ஜன.13 மற்றும் 20ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45க்கு சென்னைக்கு வரும். SHARE

News January 7, 2026

தூத்துக்குடி: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 7, 2026

தூத்துக்குடி: புகார் எண் அறிவித்த ஆட்சியர்

image

பொங்கல் தொகுப்பு, பொங்கல் பரிசு தொகை ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தில் 957 நியாய விலை கடைகள் மூலம் 541007 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகை நாளை முதல் வழங்கப்படும் நிலையில் இதில் குறைகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறை 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT

News January 7, 2026

தூத்துக்குடி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 7, 2026

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை திருட்டு

image

தூத்துக்குடி கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சரவணகுமார் மனைவி முத்துலட்சுமி அங்குள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு முத்துலட்சுமி வீட்டில் சாவி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை மற்றும் ரூ.4500 பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

தூத்துக்குடி: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News January 7, 2026

தூத்துக்குடி கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு உயர்தர இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். எனவே, இதில் பயனடையும் தொழில் பங்கிட்டாளர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!