India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு சின்னதுரை என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடன் தொல்லையால் தாயும் மகனும் நேற்று 22 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற திட்டத்தின் படி வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி முத்து நகர் பீச் எதிரே உள்ள விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளியில் வைத்து வரும் 28ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாடும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி அதிக ஒளி எழுப்பாத குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் மருத்துவமனை வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீறாப்புராணம் எனும் செவ்வியல் கவி நூலை எழுதியவர் அமுதகவி உமறுப் புலவர். நாளை (23) இவரது பிறந்த நாள். இதனை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள காவல் சோதனை சாவடி பின்புறம் உள்ள காட்டு பகுதியில், 20 நாட்களுக்கு மேலாக காணாமல் போன ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த முதியவர் முத்துமாலை(70) உடல் உருக்குலைந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் அங்குள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இந்த ஆண்டுக்கான வருமான வரி தொகையை செலுத்துவதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் கணேசனிடம் வழங்கியுள்ளார். ஆனால் அவர் இதனை செலுத்தாமல் போலி ஒப்புகைச் சீட்டு வழங்கியுள்ளார். இது சம்பந்தமாக தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸ் தலைமை ஆசிரியர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் மகன்கள் அனந்தபத்மநாபன், அனந்தராமகிருஷ்ணன், அனந்தமகேஸ்வரன்,சகோதரர்கள் சண்முகநாதன்,சிவானந்தன், என ஏழு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நாளை(அக்.23) தூத்துக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலையில் சிறையில் உள்ள காவலர் ரகுகணேஷ் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மாஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை செய்யகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி, 100 பக்கம் சாட்சியம் உள்ளதை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள்?. திறந்த நீதிமன்றத்தில் தான் நீதிபதி சாட்சி அளித்துள்ளார். இது வழக்கை இழுத்து அடிக்கும் மாதிரி உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (அக்21) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 26 ஆம் தேதி தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், உதயநிதி பிறந்தநாளை கொண்டாடுவது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.