Tuticorin

News October 25, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மானாவரி நிலங்களில் விவசாய பணிகள் துவங்கியுள்ளதால் பயிர்களுக்கு அடி உரமாக போடப்படும் டிஏபி உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

News October 24, 2024

இரவு நேர ரோந்து காவல்துறையினர் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (அக்.24) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News October 24, 2024

ஏழைகள் சாமி கும்பிட கூடாதா என உயர் நீதிமன்றம் கேள்வி

image

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயிலில் சாமி தரிசனத்துக்கு ரூ.1,000, 2,000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்?.ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

News October 24, 2024

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா துவக்கம்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் 2 அன்று  கந்தசஷ்டி விழா துவங்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலக புகழ் பெற்ற திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2 இல் யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7  மாலை கோவில் கடற்கரையில் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 24, 2024

மோசடியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு

image

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றிய போது 30 க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நேற்று முன்தினம் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில் ஏசு ராஜசேகரன் உள்ளிட்ட 2 பேர் மீது 4 பதிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

News October 24, 2024

கனிமொழி எம்.பி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி

image

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் ஒன்றியம், ஆழ்வை கிழக்கு ஒன்றியம், காயல்பட்டினம் நகராட்சி, திருச்செந்தூர் நகராட்சி, உடன்குடி கிழக்கு ஒன்றியம் போன்ற பல்வேறு பகுதிகளில் இன்று (24-10-2024) மாலை 5 மணி முதல் இரவு 9.20 மணி வரை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி உள்ளது என தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

கனிமொழி வாகனத்தை மறித்த சிறுவர்கள் வைத்த கோரிக்கை

image

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெரியதாழை கிராமத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதி சிறுவர்கள் வாகனத்தை மறித்து விளையாடுவதற்கு கைப்பந்து வாங்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக சிறுவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி கடைக்கு அழைத்து சென்று கைப்பந்து வாங்கி கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

News October 23, 2024

அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணத்தை மீட்ட அதிகாரிகள்

image

புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்த பொறியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

News October 23, 2024

தூத்துக்குடியில் ஐடிஐ நேரடி சேர்க்கை தேதி நீடிப்பு

image

தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம், போன்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தனியார் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களிலுமு் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி செயற்கையான தேதி வரும் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

கடன் தொல்லையால் தாய் – மகன் தற்கொலை

image

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு சின்னதுரை என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடன் தொல்லையால் தாயும் மகனும் நேற்று 22 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!