India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேசத்தினர் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் வேலம்பாளையம் அண்ணா வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த மூன்று பேரை வேலம்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போலி ஆதார் கார்டை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்லிடப்பேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரியில் தரமற்ற உணவுப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பேக்கரிக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான நூல் விலை பிப்ரவரி மாதத்திற்கும் விலை ஏதும் மாற்றமின்றி தொடர்வதாக நூற்பாலைகள் தெரிவித்தன. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொழில் நகரமான திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கு அதிகமாக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், பட்ஜெட்டில், பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை அறிவித்துள்ளார். இதனால், தொழில் நகரமாக திருப்பூரில் தயாரிக்கும் பின்னலாடை ரகங்கள் உற்பத்தி (ம) விற்பனை பாதிக்கப்படும்.
திருப்பூர், பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 14 தனிப்படைகள் அமைத்தும் 64 நாட்கள் கடந்தும் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
திருப்பூர் வருகை தந்த மத்திய ஜவுளித்துறை செயலாளர் நீலம் ஷமி ராவ் உடன் ஏற்றுமதியாளர்கள் தையல் எந்திர ஆட்டோமேஷன் மற்றும் சாயமேற்றும் பிரிவு மேம்பாடுகளுக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். சூரியஒளி மின்சக்திக்கு 90 சதவீதம் மானியம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் பின்னலாடை துறைக்கு சர்வதேச கண்காட்சிகளில் பிரத்யேக சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து இன்றும் நாளையும் 3 பஸ் நிலையங்களில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறுகளில் திருப்பூரிலிருந்து சிறப்பு பஸ் அந்த வகையில் கோவில் வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச பணம் காணாமல் போனதாக வெளியான “வாட்ஸ் அப்” தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், லஞ்ச பணம் காணாமல் போனதாக வெளியான “வாட்ஸ் அப்” தகவல் குறித்து ஆர்.டிஓ. விசாரணை நடக்குமென கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கடந்த 24ந் தேதி தொடங்கப்பட்டது. இங்கு தினமும் 40 பேருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 240 பேர் புதிதாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.