Tiruppur

News February 4, 2025

குடிநீர் வினியோகம் – மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2,3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் பவானி நீரேற்றம் மையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், 20ஆம் தேதி வரை 4வது குடிநீர் திட்டத்தில் விநியோகம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது குடிநீர் திட்டத்தில் பெரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 4, 2025

திருப்பூரில் இன்றைய மின்தடை

image

திருப்பூரில் இன்று (பிப்.4) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி, கிழவன்கட்டூர், எலையமுத்தூர், எரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், அமராவதிநகர், கோவிந்தபுரம், தும்பளப்பட்டி, குளத்துப்பாளையம், பொன்னிவாடி, மூலனூர், கன்னிவாடி, எஸ்.பாளையம் ஆகிய பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க.

News February 3, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

News February 3, 2025

திருப்பூர் மேயர் எச்சரிக்கை!

image

“ திருப்பூரில் தெருவிளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அலுவலர்கள் தங்கள் பகுதிகளை கண்காணிக்க வேண்டும். முறையாக செயல்படாத குப்பைகளை அகற்றும் நிறுவனங்களுக்கு, ரூ.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் நிறுவனங்கள், விதிமுறைகளின் படி செயல்படாவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்ய பரித்துறைக்க்கப்படும்” என திருப்பூர் மேயர் தினேஷ் எச்சரித்துள்ளார்.

News February 3, 2025

முன்னாள் படைவீரர்கள்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற திட்டத்தின்கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News February 3, 2025

TVK செயலாளர்கள் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்டச் செயலார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக (காங்கேயம், தாராபுரம்) யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், திருப்பூர் தெற்கு (உடுமலை, மடத்துக்குளம்) திருமலை, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக ( அவிநாசி, பல்லடம்) சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News February 3, 2025

மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

காங்கேயம், திருப்பூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்காக கரூர் மாவட்டம் புகலூர் தாலுகாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் தரணிஷ் விடுமுறை என்பதால் நேற்று வேலைக்கு வந்துள்ளார். திடீரென மண்டபத்தில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 2, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும், ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News February 2, 2025

காங்கேயம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் அதே நாள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2025

மனிதக் கழிவு வீசிய சம்பவம்: ஓபிஎஸ் கண்டனம்

image

பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் மனிதக் கழிவு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!