India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள புர்கினோ பாசோ என்கிற நாட்டிலிருந்து 14 நபர்கள் அடங்கிய தொழில் முனைவோர்கள் கொண்ட குழு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு இன்று வருகை தந்திருந்தனர். தொடர்ந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் தொழில் திறன், மனித வளம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வங்கியில் பெற்ற விவசாய கடனை வட்டி மற்றும் அசல் உடன் செலுத்தி ஓராண்டு காலம் ஆகியும், இன்னும கடனை ரத்து செய்யாமலும் பத்திரங்களை வழங்காமல் இருந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனரா வங்கி கிளையை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகை இட்டனர்.
திருப்பூர் மாவட்டம், ஆலாம்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அவரது உறவினர்களுடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது ஊதியூர், நொச்சிபாளையம் அருகே இவர்களது கார் லாரி மீது மோதியதில் பெரியசாமி (56), ரஞ்சனி பிரியா (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26ஆம் தேதி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் வழங்கவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் கோரிக்கைகளை தொகுத்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காலம் நிலவி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட மக்கள் அதற்கேற்றாற்போல் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ். கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றவில்லை எனக் கூறி பொதுமக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் தங்களுக்கு வர வேண்டிய வளர்ச்சி நிதி வரவில்லை என கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ரமேஷ் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைந்து மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையிலான மக்களுடன் முதல்வர் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று சேவூர் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலெக்டர் கிறிஸ்தவராஜ் நேரில் ஆய்வு செய்து, நலவாரிய உறுப்பினர் அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
உற்பத்தித் துறையில் புதிதாக (Freshers) பணியில் சேர்வோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு முதல் மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக (நிறுவனங்கள் தரும் ஊதியம் போக) வழங்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் முத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உற்பத்தி மையங்கள் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மேம்படும் வகையில், ரூ.15 கோடி முதலீட்டுடன் கூடிய, பிஎல்ஐ 2.0 திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பிஎல்ஐ திட்டத்தின் மூலமாக, ‘கிரீன் திருப்பூர்’, ‘பிராண்ட் திருப்பூர்’ என புதிய பிராண்ட்களை உருவாக்க திட்டமிட்டனர். இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து சரியான அறிவிப்பு இல்லை. இம்முறை அறிவிப்பு இருக்குமா?
நூறு சதவீத வேலைவாய்ப்புடன் நிப்ட்-டீ கல்லூரியில் ஆடை தயாரிப்பு துறையில் பணியாற்ற இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் திறமைக்கு ஏற்ப மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை ஊதியமும், பதவி உயர்வு பெறவும் தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் கல்வித்தகுதி குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை சேரலாம். தங்குமிடம், உணவு, பாடப்புத்தகம் ஆகியவை இலவசம்.
Sorry, no posts matched your criteria.