Tiruppur

News January 8, 2026

திருப்பூர்: பொங்கல் பரிசு ரூ.3,000 வரலயா? CALL பண்ணுங்க

image

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்றைய தினம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 8,02,201 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில் இது குறித்த புகார்கள் இருந்தால் மாவட்ட வழங்கள் அலுவலகத்திற்கு 0421-2218455, பொது விநியோக திட்ட துணை பதிவாளருக்கு 0421-2971173 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என கலெக்டர் மணிஷ் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

மடத்துக்குளத்தில் அடித்துக் கொலை: ஒருவர் கைது

image

மடத்துக்குளம் அருகே அரியநாச்சிபாளையத்தில் நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு அசாமைச் சேர்ந்த 18 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 4ம் தேதி விடுமுறை காரணமாக தொழிலாளர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டு பினயக் என்பரை பிஸ்திராம் தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதி அளித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார், பிஸ்திராமை கைது செய்தனர்.

News January 8, 2026

திருப்பூர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை

image

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் <>ஜன.15-க்கு பிறகு இங்கு கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். (SHARE)

News January 8, 2026

திருப்பூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

image

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலாமணி (55). இவர் வீட்டில் இருந்தபோது ஹீட்டர் மூலமாக வெந்நீரை சுட வைத்ததாக தெரிகிறது. அப்போது சுவிட்சை ஆப் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலாமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 8, 2026

திருப்பூர் அருகே போலீஸ் குவிப்பு

image

பெருமாநல்லூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை நீதிமன்ற உத்தரவு படி நேற்று அதிகாரிகள் அற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 8, 2026

திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யுங்கள். (SHARE)

News January 8, 2026

BREAKING திருப்பூர்: தேர்வில் தோல்வியால் தற்கொலை

image

திருப்பூர், பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி சரவணகுமார் -சிவசங்கரி தம்பதியின் மகள் தக்சிதாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் 2 பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கண்டித்ததால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News January 7, 2026

திருப்பூர்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

திருப்பூர்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

திருப்பூர் மக்களே உடனே செக் பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!