India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)

குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மின்சார அலுவலக முன்பு பல்லடத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்று கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் இவ்விபத்து குறித்து குண்டடம் போலீசார் சம்பவம் இடத்துக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)

உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை 4 வழி சாலை அமைக்கும் பணிகள், கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகின்றன. எந்த நிலையில் நூற்றுக்கு ஏற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். ஐந்து மாத சம்பளம் வழங்கப்படாத காரணத்தால், கோவை உடுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அந்தியூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து 2,000 சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் 4 நாள்களுக்கு இயக்கப்படவுள்ளது. வரும் 12, 13, 14, 15ம் தேதியில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால், வழக்கம் போல் கோவில் வழியில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டீச்சர்ஸ் காலனி பகுதியில், வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த, உதயகுமார் என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உதயகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.08) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

1).திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7).பேரிடர் கால உதவி1077. 8).கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை SHARE பண்ணுங்க.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி போத்தனூரில் இருந்து இன்று இரவு 11.30-க்கு புறப்படும் ரயில் (06194) நாளை காலை 9.50-க்கு சென்னை செல்லும். இது நாளை நள்ளிரவு 12.10-க்கு திருப்பூரிலும், 1.12-க்கு ஈரோட்டிலும் நிற்கும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து நாளை இரவு 11.50-க்கு புறப்படும் ரயில் (06193) அடுத்த நாள் காலை 9.50-க்கு போத்தனூர் சென்றடையும்.
Sorry, no posts matched your criteria.