India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆனைமலையில் இருந்து உடுமலை நோக்கி மினிவேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த பைக் மீது மினிவேன் மோதியது. இவ்விபத்தில் பைக்கில் வந்த கொடுங்கியத்தைச் சேர்ந்த தினகரன், வேதஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வேதஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் 71-வயது முதியவர் ரத்த காயங்களுடன் சடலமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

திருப்பூர் மக்களே, வாட்ஸ் அப்பில் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி APK ஃபைலை இன்ஸ்டால் செய்யச் சொல்வார்கள். நீங்கள் அந்த Fileஐ டவுன்லோடு செய்தவுடன், உங்கள் போனின் முழு கட்டுப்பாடும் மோசடிக்காரர்களிடம் சென்று விடும். அதன் மூலம் உங்கள் OTP, PIN, வங்கி விவரங்களை அவர்கள் எளிதாக திருட முடியும். மேலும், வங்கிகளில் ஒருபோதும் வாட்ஸ்அப், SMS (அ) சமூக வலைதளங்கள் மூலம் APK ஃபைல்களை அனுப்பாது. (SHARE)

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0421-2482816 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <

கேரளாவில் இருந்து விறகு ஏற்றிக் கொண்டு அவிநாசிக்கு வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை மீட்ட அவிநாசி போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).
Sorry, no posts matched your criteria.