India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1). திருப்பூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0421-2230123. 2).தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441. 3).Toll Free 1800 4252 441. 4).சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126. 5).உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் பிரச்சனை, சாலை வசதிவேண்டி என பொதுமக்களிடமிருந்து 216 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<

திருப்பூர் கலெக்டர் நாரணவரே மனீஷ் ஷங்கர்ராவ் செய்தி குறிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில் திருப்பூரில் நாளை (ஜன.13) திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆதார் அட்டையுடன் நேரடியாகப் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 87606-06234 என்ற எண்ணை அழைக்கலாம்.

திருப்பூர் மக்களே வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற தங்களது வரி தொடர்பான சேவைகளை இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறலாம். இதற்கு vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவையை பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 98849- 24299 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். (இத்தகவல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)

கரூர், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கௌதம்(25). இவர் காங்கேயத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் படும்காயம் அடைந்த கௌதம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். ( இத்தகவலை SHARE பண்ணுங்க)

திருப்பூர், சாமளாபுரம் பகுதியில் மங்கலம் போலீசார் நடத்திய சோதனையில், பாப்பாராஜ் ஹோஷன் என்பவர் பிடிபட்டார். விசாரணையில், அவர் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வங்கதேசத்திலிருந்து வந்து திருப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவரை உடனே கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் இன்று (ஜன.12) பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம், கரடிவாவி, புளியம்பட்டி, சின்னப்பன்புதூர், ராஜாயூர், அவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, தூங்காவி, ராமகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.