Tiruppur

News January 13, 2026

திருப்பூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

திருப்பூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.<> இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 13, 2026

திருப்பூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

திருப்பூர்: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு

image

திருப்பூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 13, 2026

திருப்பூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News January 13, 2026

திருப்பூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

News January 13, 2026

மூலனூர் அருகே விபத்து

image

மூலனூர் அருகே உள்ள நத்தபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் குட்டியப்ப கவுண்டர். இவர் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 13, 2026

பொங்கல் பரிசு: திருப்பூர் மக்களே உஷார்

image

திருப்பூர் மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

News January 13, 2026

பாதயாத்திரையில் சோகம்: திருப்பூர் பெண் பலி

image

திருப்பூரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனை தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 13, 2026

திருப்பூரில் ட்ரோன் பறக்க தடை

image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் கணக்கம்பாளையம் மற்றும் பிச்சம்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி அப்பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதித்து கலெக்டர் நாரணவரே மனீஷ் ஷங்கர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.12) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!