India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியை சேர்ந்த கவுண்டத்தாள், இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ரூ.99,500-ஐ திருடி சென்றார். இது குறித்து அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுகுமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.99,500-ஐ பறிமுதல் செய்தனர்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவராக, திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பப்பீஸ் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 43 ஆண்டு காலமாக வாரிய உறுப்பினராக செயல்பட்டு வந்த அவர், தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சூழலை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி வைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.05) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.

திருப்பூர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

திருப்பூர் மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (05.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை பகுதியில் தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி ஆகிய பகுதிகள் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கதிர்வேல், கோகுலகண்ணன், ஹரிகுமார் மற்றும் பெண் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் சேர்ந்த சேகர் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டித்துரை படுகாயமடைந்து திண்டுக்கல் GH-ல் சிகிச்சை உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.