India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கேயம் போலீஸ் நிலையம், பேருந்து நிலைய ரவுண்டானா, டவுன் பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பூர் காதர் பேட்டை பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிவறையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்ததாக வீடியோ வெளியான நிலையில் அன்புமணி ராமதாஸ் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். கழிவறையில் தூய்மை தொழிலாளர்கள் தங்க வைப்பதுதான் திமுகவின் சமூகநீதியா என கேள்வி எழுப்பிய அவர் இது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்த கீதா கடந்த மே மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கூறுகையில், அமராவதி ஆற்றில் மூன்று நாட்களாக மூன்று டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இங்குள்ள உப்பாறு அணை காய்ந்து கிடக்கிறது. எனவே உப்பாறு அணைக்கு தண்ணீர் விடவில்லை என்றால் தண்ணீரில் இறங்கி கண்ணீர் விடுகின்ற போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
திருப்பூர், அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு திட்ட கமிஷன் துறையின் மூத்த உறுப்பினர் விஜயபாஸ்கர் உடன் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திருப்பூரில் தேவைகள் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக அரசு எந்த விதத்தில் உதவி செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக நிலக்கடலையை வேளாண்மை துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். மத்திய அரசின் தேசிய விதை கழகம் ஜெ.ஜெ-32 என்ற புதிய ரக நிலக்கடலை ரக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரக விதையின் வாயிலாக விளைவிக்கப்படும் நிலக்கடலையில் 90 காய்கள் பிடிக்கும். முதல் கட்டமாக திருப்பூர், அவிநாசி பகுதி கீழ் உள்ள விவசாயிகளுக்கு இந்த புதிய ரக நில கடலை தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பிசப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு 847 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக நிலக்கடலையை வேளாண்மை துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். மத்திய அரசின் தேசிய விதை கழகம் ஜெ.ஜெ-32 என்ற புதிய ரக நிலக்கடலை ரக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரக விதையின் வாயிலாக விளைவிக்கப்படும் நிலக்கடலையில் 90 காய்கள் பிடிக்கும். முதல் கட்டமாக திருப்பூர், அவிநாசி பகுதி கீழ் உள்ள விவசாயிகளுக்கு இந்த புதிய ரக நில கடலை தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
➤பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ➤திருப்பூரில் உள்ள கழிவறைக்கு உட்பட்ட அறையில் வடமாநில வாலிபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது குறித்த வீடியோ வைரல். ➤11ஆம் வகுப்பிற்கு சேர்க்க மறுப்பு மாணவி கலெக்டரிடம் மனு. ➤அமராவதியில் 14ஆவது நாளாக உபரிநீர் வெளியேற்றம். ➤விளையாட்டு மைதானம் அமைத்து தருமாறு சங்கராநல்லூர் பேரூராட்சி சார்பில், அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், துணை தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் பள்ளி நிர்வாகம் தன்னை பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர அட்மிஷனுக்கு மறுப்பதாக தெரிவித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.