Tirupathur

News January 15, 2026

திருப்பத்தூர்: பைக் விபத்தில் பெண் பலி!

image

குளத்தூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி இந்திரா (38). இவர் நேற்று (ஜன.14) இரவு 10 மணியளவில் புது கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஜன.16) வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளை மூட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உத்தரவை மீறி கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

News January 15, 2026

திருப்பத்தூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இந்த இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News January 15, 2026

திருப்பத்தூர்: முக்கிய அரசு எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 15, 2026

திருப்பத்தூர்: பொங்கல் நேரத்தில் கரண்ட் கட்டா? உடனே CALL!

image

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க காஞ்சிபுரம் மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 15, 2026

திருப்பத்தூர்: ரேஷன் கடை ஊழியர் மீது புகார் செய்ய வேண்டுமா?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 15, 2026

திருப்பத்தூர்: NCRT புத்தக ஆராய்ச்சி செய்தவருக்கு பாராட்டு

image

தமிழ் நாட்டில் இருந்து NCRT புத்தகம் தொடர்பான ஆய்வறிக்கை ஆராய்ச்சி பணிக்காக ஐந்து ஆசிரியர்கள் டெல்லி சென்றனர். இதில் திருப்பத்தூரை சேர்ந்த ஜவகர் ஒரு மாத ஆராட்சியை முடித்த்து நேற்று சொந்த ஊர் திரும்பினார். இவரது பணியை பாராட்டி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று வழக்கறிஞர் கபிலன் மற்றும் தேமுதிக மாவட்ட பொருளாளர் ஐ.ஆஞ்சி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 15, 2026

திருப்பத்தூர்: குடும்பத்தில் பிரச்சனையா? உடனே CALL!

image

திருப்பத்தூரில் நேற்று (ஜன.14) கணவன் குடிபோதையில் மனைவியின் கையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் இத்தகைய கொடுமைகளை பொறுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கணவன் மதுபோதையில் தகராறு செய்தாலோ, அடித்தாலோ, மன ரீதியாக துன்புறுத்தினாலோ உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை அணுகி புகார் அளிக்கவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

திருப்பத்தூரில் மேஸ்திரி மர்ம மரணம்!

image

ஆதியூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கார்த்திகேயன் (43). இவர் நேற்று (ஜன.14) அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தின் கீழே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

திருப்பத்தூர்: அடிதடியில் கார்பெண்டர் பலி!

image

கோவிலூரை சேர்ந்த கார்பெண்டர் காணிக்கைராஜ் (51). இவர் கடந்த 4-ம் தேதி இரவு ராமநாதன் (70), அஜித் (25), முரளி (42) ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில் முரளி, குமார் இருவரும் காணிக்கைராஜை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த இவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜன.13) உயிரிழந்தார். இதை தொடர்ந்து போலீசார் குமார், முரளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!