Tirupathur

News January 16, 2026

திருப்பத்தூர் காவல்துறை உதவி எண்கள்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஜன.16) மாவட்ட முழுவதும் முக்கியமான இடங்களில் பேனர்கள் மூலம் அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் SP அலுவலக உதவி எண்: 9442992526, காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 04179221104, தனி பிரிவு அலுவலகம்: 04179221103, போதை பொருள் தகவல்: 9159959919, மூத்த குடிமக்கள் உதவி எண்: 9486242428, SP அலுவலக முகாம் உதவி எண்: 04179221105.

News January 16, 2026

திருப்பத்தூர்: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ) திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT!

News January 16, 2026

திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகை உயர்த்தபட வேண்டும். 2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக செலுத்தப்பட வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள், சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். உடனே ஷேர் பண்ணுங்க.

News January 16, 2026

திருப்பத்தூர்: கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழா

image

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று (ஜன.15) கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News January 16, 2026

திருப்பத்தூர்: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

image

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 16, 2026

திருப்பத்தூர்: பொங்கலன்று நேர்ந்த துயரம்!

image

ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் நேற்று (ஜன.15) சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில், வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2026

திருப்பத்தூர்: பொங்கலன்று நேர்ந்த துயரம்!

image

ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் நேற்று (ஜன.15) சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில், வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2026

வாணியம்பாடியில் பரபரப்பு

image

வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த சி.பலராமன், நேற்று (ஜனவரி 15) சாலை விபத்தில் உயிரிழந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை தனது சொந்த ஊருக்கு வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. பட்டதாரி ஆசிரியரின் இந்தத் துயரமான மறைவு அப்பகுதி மக்களிடையேயும், கல்வி வட்டாரத்திலும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News January 16, 2026

திருப்பத்தூரில் ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

image

ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கமலா (85). இவர் நேற்று (ஜன.15) சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டி அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

News January 16, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் ஜனவரி 15 இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவில் வேலை செய்வோர், வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் மேலே உள்ள போன் நம்பர் கால் செய்து எந்நேரமும் அழைக்கலாம்.

error: Content is protected !!