India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிறு தொழில் மேற்கொண்டு வரும் தொழில் முனைவோருக்கு தொழிலை மேம்படுத்த வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் இதுவரை 669 தொழில் முனைவோர்களுக்கு ரூ.14,00,19,000 மதிப்பீட்டில் தொழில் தொடங்க வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE IT!

திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே இன்று (ஜன.14) சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது முதியவர் மீது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10 வகுப்பு தேர்ச்சி பெறாதவருக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.

திருப்பத்தூரில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வாழிகாட்டுதல் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி, கோடியூர் மைதானத்தில் ஜனவரி 26 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜன.14) போகிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பின்னர் வீடுகளில் வேப்பில, ஆவாரம்பூ, பண்ணைப் பூ, மா இலை, ஆகியவற்றை தோரணமாக கட்டி அலங்கரித்து வருகின்றனர்.

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் புகார் பண்ணுங்க. (HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030) பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

திருப்பத்தூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே! ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.