Tirupathur

News January 15, 2026

ஜோலார்பேட்டையில் போலீசார் மீது பைக் மோதல்

image

ஜோலார்பேட்டை போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலிசார் (ஜன.13) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் சேர்ந்த வசந்த் (வயது 28) என்பவர் சோதனையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து நேற்று (ஜன.14) ஜோலார்பேட்டை போலிசார் சப் இன்ஸ்பெக்டர் மீது மோதிய வசந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

News January 15, 2026

திருப்பத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜன.14) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியை சேர்ந்த அஸ்லம் பாஷா புகார் மனு அளித்தார். உடன் ஆல்பர்ட், ரஞ்சித் குமார், ராஜேந்திரன் ஆகியோர் சென்று மனு அளித்தனர்.

News January 15, 2026

திருப்பத்தூர் காவல்துறையினர் விழிப்புணர்வு

image

வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.14) வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பிரச்சார துண்டுகள் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

News January 15, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ஜனவரி 14 ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரும் பொதுமக்கள் உடனடியாக கால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரங்களில் வேலை செய்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுவோர் காவல்துறை அதிகாரிகளின் நம்பரை போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

News January 14, 2026

திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-14) “சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தனிப்பட்ட புகைப்படங்களை சைபர் கிரைம் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது கவனம் தேவை.”

#cybercrime #scam

திருப்பத்தூர்: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

திருப்பத்தூர் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்

*திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
*மயில் பாறை முருகன் கோயில்
*வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
*கந்திலி வெக்காளியம்மன் கோயில்

மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

திருப்பத்தூர்: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருப்பத்தூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி விசைத்தறி உரிமையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை நேற்று (ஜன-13) வெளியிட்டுள்ளார். அதில் “சாதாரண விசைத்தறிகளை,
நவீன மயமாக்கல் (Powerloom Modernisation scheme) திட்டத்தின் மூலம் விசைத்தறிகளுக்கு தலா ரூ.1,00,000 வரை மானியம் வழங்கப்படுகிறது எனவும் இந்த வாய்ப்பை அனைவருக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!