Tirunelveli

News January 25, 2025

நெல்லை மக்களே உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) நெல்லை மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

News January 25, 2025

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இன்று (ஜன.25) சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் சோதனைக்கு பின்பு புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்யது அமீர் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

News January 25, 2025

நெல்லை ஐ.டி.ஐ யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

நெல்லை, குமரி. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய  மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை, பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ தகுதி பெற்ற பயிற்சியாளர்கள்,தொழில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும்  விவரங்களுக்கு 94990 55790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

News January 25, 2025

நெல்லை ஐ.டி.ஐ யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

நெல்லை, குமரி. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய  மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை, பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ தகுதி பெற்ற பயிற்சியாளர்கள்,தொழில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும்  விவரங்களுக்கு 94990 55790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

News January 25, 2025

மது விற்றால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜன-25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை  மாவட்டத்தில் அனைத்து மதுபான கூடங்கள் மதுபான கடைகள் மூடப்படுகிறது . இதனை மீறி கள்ள சந்தையில் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

News January 25, 2025

கன்னியாகுமரி – சென்னை சிறப்பு ரயில்

image

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதி வேக சிறப்பு ரயில் நேற்று இரவு 10:40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இன்று நெல்லைக்கு காலை 8:40 மணிக்கு வருகிறது. இங்கிருந்து காலை 8:42 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. இதே ரயில் நாளை கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.

News January 25, 2025

முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க அரிய  வாய்ப்பு

image

தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி, ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் பி ஃபார்ம் , டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.muthalvarmarundham.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்கு முன் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News January 25, 2025

நெல்லைக்கு  வெடிகுண்டு மிரட்டல்

image

நெல்லையில்  குடியரசு தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இன்று (ஜன-25) கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது 

News January 25, 2025

இறந்த தாயை சைக்கிளில் கொண்டு சென்ற விவகாரம்; டீன் விளக்கம்

image

உடல் நலக்குறைவால் இறந்த தாயின் உடலை 25 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கட்டி சென்ற அதிர்ச்சி சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் விளக்கம் அளித்துள்ளார்.அதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து யாரிடமும் கூறாமல் சிவபாலன் தனது தாய் சிவகாமியம்மாளை அழைத்துச் செல்லும் போது உயிருடன் இருந்துள்ளார். கேமரா பதிவுகள் மூலம் உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

News January 25, 2025

நெல்லை வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனவரி 28ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். பாளையங்கோட்டை அடுத்த திடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் 25வது ஆண்டு வெள்ளி விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!