India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் வள்ளியூரில் 2 இடங்களிலும், அம்பாசமுத்திரத்தில் 4 இடங்களிலும், திருநெல்வேலி மாநகர பகுதியில் 12 இடங்களிலும் என மொத்தம் 18 இடங்களில், நாளை [ஜன.30] சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முகாம் அந்தந்த பகுதிகளில், காலை 9 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 1:30 முதல் 4 மணி வரையிலும் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர், திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி திருக்குறுங்குடி ஆகிய 7 நகர பஞ்சாயத்து களக்காடு நகராட்சிக்கும் 423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெற்று பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு பணகுடியில் நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய நிகழ்ச்சியான பத்திர தீப திருவிழா நேற்று முந்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று ஜனவரி மாலை 6 மணிக்கு தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றப்படும் தங்க விளக்கு தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொருநை இலக்கிய திருவிழா, கலைத் திருவிழா, புத்தகத் திருவிழா பொருநை விழா விழிப்புணர்வுக்காக இலக்கிய ஆளுமைகள் படைப்பிலக்கியங்களில் இடம் பெற்ற குறுக்குத் துறை படித்துறையில் 50 கவிஞர்கள் கூடும் கவிதை வேள்வி இன்று (ஜன29) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கவிஞர்கள் 16 வரியில் புத்தகம் பேசுது என்ற தலைப்பில் கவிதை எழுதி வாசிக்க வேண்டும். இதில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கூடுதாழை பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜன.29) காணொளி காட்சி வாயிலாக தூண்டில் வலையுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
நெல்லையில் நேற்று நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டார். அதில் நெல்லை மாவட்டத்திற்கு பிப்ரவரி 6,7 வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.6,400 கோடியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி திருநெல்வேலி புறநகர் மாவட்ட ராதாபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் கூடங்குளத்தை சேர்ந்த விக்னேஷ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார் .
நெல்லையில் நாளை(ஜனவரி 29) வள்ளியூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, களக்காடு, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் இன்று(ஜன.28) கேட்டுக் கொண்டுள்ளது.
பிப்.7ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேச இருக்கிறார். மாஞ்சோலை மக்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிய இருக்கிறார். முன்னதாக பிபிடிசி நிறுவனம் குத்தகை காலம் முடிந்து விட்டதாக மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வெளியேற்றச் சொல்லி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து அங்கிருந்த மக்கள் கண்ணீருடன் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது
அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாளை(ஜன.29) மாலை 4.30 மணிக்கு தை மாத அமாவாசையை முன்னிட்டு 63- நாயன்மார்கள் சன்னதியில் முன்பாக திருவிளக்கு ஏற்றி திருமுறை பாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவுரு மாமலைபன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார்.
Sorry, no posts matched your criteria.