Tirunelveli

News August 28, 2025

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு அதிகாரிகளின் மாநகர காவல் ஆணையர் உத்தரவு தெரிவித்து வருகிறார் அந்த வகையில் இன்று இரவு ரொம்ப அதிகாரியான உதவி ஆணையர் அஜிக்குமார் அறிவியல் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவு.

News August 28, 2025

ஒரே மாதத்தில் 15,000 மனுக்களுக்கு தீர்வு – கலெக்டர் தகவல்

image

நெல்லையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வரும் 07.10.2025 வரை 255 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். கடந்த 15.07.2025 முதல் 26.08.2025 வரை 32226 மனுக்கள் பெறப்பட்டடு 15226 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 17000 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.

News August 28, 2025

நெல்லை ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

image

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

நெல்லை மக்களே; கட்டாயம் தெரிந்து கொள்ளவும்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்காலங்களில் தெருக்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிப்பது, மழைநீர் தேங்குவது, தூய்மையற்ற குடிநீர், கொசுக்கள் உற்பத்தி, நோய் பரவுதல், மின்தடை, மரங்கள் சாய்வது மற்றும் பள்ளி, மருத்துவமனை போன்ற பொது இடங்களில் ஏற்படும் புகார்களை இந்த ஒரே இடத்தில் புகார் அளிக்கலாம். <<-1>>லிங்க் <<>>கிளிக் செய்து புகாரினை பதிவிடுங்கள். எல்லாரும் தெரிஞ்சுக்க; மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

நெல்லை வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476, 9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News August 28, 2025

நெல்லையில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

image

நெல்லையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 44 (15+29) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக.29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே<> கிளிக்<<>> செய்யப்வும். ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தேவையில்லாத செயலிகள்; மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் வாயிலாக பண மோசடி அதிக அளவு நடைபெறுகிறது. எனவே மொபைலில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையில்லாத லிங்க்கை ஓபன் செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 27, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.27] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News August 27, 2025

எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர்

image

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் குறைதீர்வு கூட்டம் நாளை பிற்பகல் 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என ஆர்டிஓ சுகன்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!