India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.29] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லையை சேர்ந்தவர் பெருமாள். தற்போது திமுகவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஆக உள்ளார். கங்கைகொண்டான் அருகே தாமிரபரணி பொறியியல் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை கல்லூரி நிர்வாக குழு கூட்டத்தில் நடைபெற்ற பிரச்னையில் அவரை ஒரு தரப்பினர் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.

நெல்லை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு ஆயுதபூஜை, தீபாவளி விழா கால சிறப்பு ரயில்கள் – இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது.
1. நாகர்கோயில் – தாம்பரம் – நாகர்கோயில் (வழி:திருநெல்வேலி)
2.திருநெல்வேலி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி. 3. சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல். 4.சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை- சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை பல்கலையில் இரு சமூக மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையற்ற விடுமுறை அளித்து மனோன்மனியம் சுந்தரனர் பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக இரு சமூக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணம் என கூறப்படுகிறது.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்வு நடைபெற்றது. இதில், வருவாய் அலுவலர் சுகன்யா, ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தமிழ் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு 10 மாணவர்களுக்கு கேள்வியின் நாயகன்/நாயகி, பெருமித செல்வன்/செல்வி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

நெல்லை மக்களே, மத்திய விண்வெளி துறையான ISRO வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ (அ) B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு அந்தந்த துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு<

நெல்லை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<

நெல்லை மாவட்ட முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் எண்கள் ஐ SAVE பண்ணிக்கோங்க
➡️ மாநகராட்சி ஆணையர்: 0462-2329328
➡️மாவட்ட வருவாய் அலுவலர்: 0462-2500466
➡️மாவட்ட ஊரக வளாச்சி முகமை: 0462-2500611
➡️நேர்முக உதவியாளர் (பொது) – 0462-2500224
➡️காவல் கண்காணிப்பாளர் – 0462-2568020
மிகவும் பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று அறிக்கை ஒன்றில் கூறும் போது, நெல்லை மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்து பரப்புவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.