Tirunelveli

News February 7, 2025

நெல்லை கோட்டத்தில்  61.74 கோடி பெண்கள் பயன்

image

நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், கட்டிடம், பீடி சுற்றும் பெண் தொழிலாளிகள், ஜவுளி ரக கடை நிறுவனங்களில் பணிக்கு தினமும் வந்து செல்லும் 61.74 கோடி பேர் இதுவரை மகளிர் இலவச பயணத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளதாக நெல்லை கோட்ட போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 7, 2025

நெல்லையை விட ஒன்றிய அரசின் அல்வா ஃபேமஸ் – முதல்வர்

image

நெல்லை அல்வா என்றால் உலகமெங்கும் பேமஸ், ஆனால், தற்போது ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கும் அல்வாதான் அதைவிட பேமஸ் என ஒன்றிய அரசை விமர்சித்து நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.நேற்றைய தினம் நெல்லை இருட்டுக்கடையில் முதல்வர் அல்வா வாங்கி சாப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.

News February 7, 2025

நெல்லைக்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர்(1/2)

image

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
அதில் நாங்குநேரி அருகே 2,297 பரப்பளவில் புதிய தொழிற்பூங்கா, மதுரை – குமரி சாலையில் குலவாணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம், நெல்லை நகரில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும், மேலும் வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை, நெல்லையில் தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

News February 7, 2025

நெல்லைக்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர்(2/2)

image

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். மேலப்பாளைத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம், மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், முறப்பநாட்டில் பணிகள் தொடக்கம், மேலப்பாளையம், அம்பாசமூத்திரம் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

நெல்லையில் வெள்ளித்தேர் முதல்வர் அறிவிப்பு

image

நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசி வருகிறார். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நெல்லையின் அடையாளமாக திகழும் நெல்லையப்பர் கோவிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு ,தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது நமது கலைஞர் ஆட்சியில் தான். வரும் நவம்பர் மாதத்திற்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும் எனவும் முதல்வர் பேசியுள்ளார்

News February 7, 2025

ஜாக்டோ – ஜியோ போராட்டம் அறிவிப்பு

image

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நெல்லை மாவட்ட அமைப்பின் சார்பில் நேற்று இரவு (பிப்-6) மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் வரும் 14. 02 .2025 வெள்ளிக்கிழமை மாலை ராதாபுரம் ,நாங்குநேரி, அம்பாசமுத்திரம், பாளை, திருநெல்வேலிஆகிய 5 இடங்களில் மாலை நேர கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் 25.02.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

News February 7, 2025

நெல்லையில் 42 நிறுவனங்கள் மீது நடவடிக்கை 

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று (பிப்-6) விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை , தென்காசி மாவட்டங்களில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடுகள் கொண்ட 42 நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

News February 7, 2025

ஆள்மாறாட்டம் செய்து 2.5கோடி நிலம் மோசடி

image

நெல்லையை  சேர்ந்த ஸ்ரீ வள்ளி என்பவருக்கு சொந்தமான இடம் விஎம் சத்திரம் ஆட்சி மடம் பகுதியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ 2.5 கோடி ஆகும். இவரது நிலத்தை 3 பேர் சேர்ந்து  போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் குமரியை சேர்ந்த நிர்மலா என்பவரை கைது செய்து ,ஜெரால்டு செல்வராஜ்,ராஜசேகர், அண்ணாதுரை ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

News February 6, 2025

முதல்வருக்கு புத்தகம் பரிசளித்த சபாநாயகர்

image

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்வதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காகவும் நெல்லைக்கு வருகை தந்தார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழக சபாநாயகரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு கலைஞர் புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

News February 6, 2025

நெல்லை மாநகர பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுபயனமாக முதல்வர் இன்று வருகை தந்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கும் பள்ளிகள் மதியம் 12-30 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!