India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதி வேக சிறப்பு ரயில் நேற்று இரவு 10:40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இன்று நெல்லைக்கு காலை 8:40 மணிக்கு வருகிறது. இங்கிருந்து காலை 8:42 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. இதே ரயில் நாளை கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி, ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் பி ஃபார்ம் , டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.muthalvarmarundham.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்கு முன் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நெல்லையில் குடியரசு தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இன்று (ஜன-25) கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது
உடல் நலக்குறைவால் இறந்த தாயின் உடலை 25 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கட்டி சென்ற அதிர்ச்சி சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் விளக்கம் அளித்துள்ளார்.அதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து யாரிடமும் கூறாமல் சிவபாலன் தனது தாய் சிவகாமியம்மாளை அழைத்துச் செல்லும் போது உயிருடன் இருந்துள்ளார். கேமரா பதிவுகள் மூலம் உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனவரி 28ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். பாளையங்கோட்டை அடுத்த திடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் 25வது ஆண்டு வெள்ளி விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர காவல் வெடிகுண்டு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் நேற்று(ஜனவரி 24) இரவு வெடிகுண்டு கண்டு பிடிப்பு மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. ரயில் இருப்புப் பாதை காவலர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களும் உடன் இருந்தனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நேற்று(ஜன.24) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிவாலயத்தை பக்தர்களுடன் தரிசனம் செய்து பின்பு ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் அடுத்த நான்கு தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. தமிழக அளவில் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது என நெல்லை வானிலை ஆய்வாளர் ராஜா கணித்து தகவல் பதிவு செய்துள்ளார் மேலும்தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி இன்று உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார் .
நெல்லை மாவட்டம் வள்ளியூர் டிப்போ அருகில் நாளை மறுநாள்(ஜனவரி 27) காலை 10 மணி அளவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பிளஸ் டூ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களும் வேலை தேடுபவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விவரங்களுக்கு 87548 10357 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் வங்கி கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி,ஜோஸ்வா ஆகிய இருவர் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டி வீட்டில் 18 கிலோ நகையை மீட்டுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.