India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார். அப்பொழுது கூட்டணிக்கு ரெய்டு எல்லாம் விட வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினாலே போதும் என தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தை கடந்தும் நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மிதமான மழை பெய்கிறது. இந்த நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி முதல் மீண்டும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என நெல்லை வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76வது குடியரசு தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தில் இன்று (ஜன-26) காலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் யோகா ஆசிரியர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
76வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது .இதனை முன்னிட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது .மேலும் முக்கிய ரயில்வே நிலையங்கள் பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பேட்டை அரசு ஐடிஐயில் வரும் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், எஸ்எஸ்எல்சி பிளஸ் டூ மார்க் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போட்டோக்கள் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) நெல்லை மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இன்று (ஜன.25) சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் சோதனைக்கு பின்பு புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்யது அமீர் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
நெல்லை, குமரி. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை, பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ தகுதி பெற்ற பயிற்சியாளர்கள்,தொழில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும் விவரங்களுக்கு 94990 55790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நெல்லை, குமரி. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை, பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ தகுதி பெற்ற பயிற்சியாளர்கள்,தொழில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும் விவரங்களுக்கு 94990 55790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜன-25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அனைத்து மதுபான கூடங்கள் மதுபான கடைகள் மூடப்படுகிறது . இதனை மீறி கள்ள சந்தையில் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.