India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் அறுவடைத் தொடங்கிய விவசாயிகளுக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 35 நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அம்பை-12, சேரன்மாதேவி-12, பாளையங்கோட்டை-7, நாங்குநேரி-2, நெல்லை-1, மானூர்-1 என அமைந்துள்ளன. சன்னரக நெல் குவிண்டுக்கு ரூ.2,545 பொதுரகத்துக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக விற்று பயனடையலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். *ஷேர்

பாளை -சீவலப்பேரி மெயின் ரோட்டில் கொம்பந்தானுர் ஊருக்கு மேல்புறம் இசக்கியம்மன் கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்தார். இதுக்குறித்து பாளை தாலுகா போலீசார் பெண் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த பெண் கருப்பு நிறம் பூ போட்ட நைட்டி அணிந்திருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லை, ஏர்வாடியைச் சேர்ந்த மாணவர், வள்ளியூரில் உள்ள கெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். வகுப்பில் பேசியதாக கூறி ஆசிரியை சுபாஷினி அவரை பிரம்பால் தாக்க, அவர் காயமடைந்தார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாணவனின் தாய் நீதிக்காக போராடுவோம் என்றார். மாவட்ட கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்தார்.

மைசூர் – நெல்லை சிறப்பு ரயில் (06239) வருகிற 15 ஆம் தேதி முதல் நவம்பர் 24 வரை திங்கட்கிழமை தோறும் மைசூரில் இருந்து இரவு 8.15 க்கு புறப்படும். மறு மார்க்கத்தில் நெல்லை மைசூர் சிறப்பு ரயில் (06240) செவ்வாய் கிழமை மாலை 3. 40 மணிக்கு புறப்படும். தசரா தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் எந்த ரயிலுக்கு முன்பதிவு நடக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (செப்.13) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <

திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக திருவள்ளுவர் இரண்டு அடுக்கு மேம்பாலம் உள்ளது. கீழ்பாலத்தில் உள்ள சுவர் விளிம்புகளில் பலர் ஆபத்தை உணராமல் படுத்து தூங்குகின்றனர். இதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருமலை நம்பி கோயில் மலையடிப்புதூர் மண்டகப்படி விழா குழு நிர்வாகியாக உள்ளார். இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் வருகிற 15-ம் தேதிக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் காற்றின் வேகம் குறைந்து வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. பாளையில் நேற்று 100 டிகிரி வெப்பம் பதிவானது.
Sorry, no posts matched your criteria.