India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் நேற்று நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டார். அதில் நெல்லை மாவட்டத்திற்கு பிப்ரவரி 6,7 வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.6,400 கோடியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி திருநெல்வேலி புறநகர் மாவட்ட ராதாபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் கூடங்குளத்தை சேர்ந்த விக்னேஷ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார் .
நெல்லையில் நாளை(ஜனவரி 29) வள்ளியூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, களக்காடு, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் இன்று(ஜன.28) கேட்டுக் கொண்டுள்ளது.
பிப்.7ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேச இருக்கிறார். மாஞ்சோலை மக்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிய இருக்கிறார். முன்னதாக பிபிடிசி நிறுவனம் குத்தகை காலம் முடிந்து விட்டதாக மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வெளியேற்றச் சொல்லி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து அங்கிருந்த மக்கள் கண்ணீருடன் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது
அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாளை(ஜன.29) மாலை 4.30 மணிக்கு தை மாத அமாவாசையை முன்னிட்டு 63- நாயன்மார்கள் சன்னதியில் முன்பாக திருவிளக்கு ஏற்றி திருமுறை பாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவுரு மாமலைபன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை தருவதை முன்னிட்டு திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாட்டில் இன்று நெல்லையில் ஒருங்கிணைந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் நேரு மாவட்ட செயலாளர்கள் மைதீன்கான் ஆவுடையப்பன் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.
“திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 56வது நிலைக்குழு கூட்டம் வரும் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்குகிறார். இதில் முக்கிய கல்வி சார்ந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள காரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 21 நபர்கள் விஜயாபதி கடற்கரைக்கு சரக்கு வாகனத்தில் நேற்று ( ஜன.27 ) சென்று கொண்டிருந்தனர். அப்போது உதயத்தூர் ஜங்ஷன் அருகே சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வாகனத்தில் பயணம் செய்த 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் ராணுவ பணியின் போது உயிர் நீத்த படை வீரர்களின் கைம் பெண்கள் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகிற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
இன்று காலை 10:30 மணிக்கு நெல்லை மாநகராட்சி மைய கட்டிடத்தில் வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நெல்லை சுவாமி நெல்லையப்பர் அதிபதி அம்மன் கோயிலில் பத்திர தீப விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக தங்க விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யு ஜி சி வரைவு அறிக்கையை திரும்ப பெற கோரி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் .
Sorry, no posts matched your criteria.