India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக நெல்லை மாவட்டம் முதல் பரிசு பெற்றுள்ளது. இதற்காக திண்டுக்கல்லில் நேற்று ஜனவரி 29 நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுக்கு அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன், சக்கரபாணி ஆகியோர் விருது மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர்.
நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று (ஜன-29) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டமும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு இணைந்து சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவில் பிரசாதம் நெல்லை அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ520 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. இது குறித்து ஏற்கனவே அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். *ஷேர்
நெல்லை மாநகர போலீஸ் கிழக்கு துணை கமிஷனராக பணியாற்றிய விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீண்டும் நெல்லை மாநகர போலீஸ் தலைமையிட துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு அவர் முறைப்படி நேற்று பொறுப்பேற்றார். கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். புதிய தலைமையிட துணை கமிஷனராக பொறுப்பேற்ற விஜயகுமாருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலகுனத்தூர் பொத்தை அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் லாரியில் கொண்டு வந்து மனிதக் கழிவுகளை கொட்டிச் சென்றனர். இதுகுறித்து திருவேங்கடநாதபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்லத்துரை அளித்த புகாரின்படி சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சோனமுத்து மற்றும் போலீசார் கொண்டா நகரம் லாரி டிரைவர் தேவகுமார் கிளீனர் ஜெயகாந்த் ஆகியோரை நேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் வள்ளியூரில் 2 இடங்களிலும், அம்பாசமுத்திரத்தில் 4 இடங்களிலும், திருநெல்வேலி மாநகர பகுதியில் 12 இடங்களிலும் என மொத்தம் 18 இடங்களில், நாளை [ஜன.30] சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முகாம் அந்தந்த பகுதிகளில், காலை 9 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 1:30 முதல் 4 மணி வரையிலும் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர், திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி திருக்குறுங்குடி ஆகிய 7 நகர பஞ்சாயத்து களக்காடு நகராட்சிக்கும் 423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெற்று பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு பணகுடியில் நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய நிகழ்ச்சியான பத்திர தீப திருவிழா நேற்று முந்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று ஜனவரி மாலை 6 மணிக்கு தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றப்படும் தங்க விளக்கு தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொருநை இலக்கிய திருவிழா, கலைத் திருவிழா, புத்தகத் திருவிழா பொருநை விழா விழிப்புணர்வுக்காக இலக்கிய ஆளுமைகள் படைப்பிலக்கியங்களில் இடம் பெற்ற குறுக்குத் துறை படித்துறையில் 50 கவிஞர்கள் கூடும் கவிதை வேள்வி இன்று (ஜன29) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கவிஞர்கள் 16 வரியில் புத்தகம் பேசுது என்ற தலைப்பில் கவிதை எழுதி வாசிக்க வேண்டும். இதில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கூடுதாழை பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜன.29) காணொளி காட்சி வாயிலாக தூண்டில் வலையுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.