Tirunelveli

News February 4, 2025

நெல்லை மாவட்ட பிஜேபி தலைவர் அறிவிப்பு 

image

திருப்பரங்குன்றம் கந்தர் மலை (சிக்கந்தர் மலை) விவகாரத்தில் மதுரையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து வண்ணார்பேட்டையில் இன்று மாலை நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட தலைவர் முத்து தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் கைது

image

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தாமிரபரணியில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்வதற்கு முயற்சித்த இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் உடையார் இன்று பிப் (4)வண்ணாரப்பேட்டை அவரது இல்லத்தில் வைத்து  போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

News February 4, 2025

நம்ம ஊர் நம்ம கோவில்

image

நெல்லை மாவட்டத்தில் மிகப்பெரிய குடவரை கோவில் வள்ளியூர் முருகன் கோவில்.
வள்ளி கேட்ட வரத்தின் படி முருகன் வள்ளியை திருத்தணிகையில் மணமுடித்து மலைக்குகையில் வள்ளியுடன் வந்து அமர்ந்ததால் வள்ளியூர் என அழைக்கப்பட்டது. வள்ளி சமேத முருகப்பெருமானை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கார்த்திகை மாத தெப்பத் திருவிழா, சித்திரை தேரோட்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

News February 4, 2025

நெல்லை : முதல்வர் வருகை பிரமாண்ட மேடை தயார் 

image

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 6 மற்றும் 7- ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த விழாவின்போது 7- ந்தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் 6,400 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் .இந்த விழாவிற்காக 20,000 மேற்பட்டோர் அமரும் வகையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

News February 4, 2025

பேட்டையைச் சேர்ந்தவருக்கு துபாயில் 2.35 கோடி ரூபாய் பரிசு

image

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் பீர் முஹம்மது ஆதம். இவர் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அங்கு அவர் அதிர்ஷ்ட லாட்டரி வாங்கியுள்ளார்.அந்த லாட்டரியில் 10 லட்சம் திர்ஹம் இந்திய மதிப்பில் 2.35 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.பரிசுத் தொகையை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

நெல்லையில் சிறப்பு மருத்துவ முகாம் இடங்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் குளிர்கால சிறப்பு மருத்துவ முகாம் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நாளை (பிப்.4) 9 வட்டாரங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் பிற்பகலில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதை அந்தந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

முதல்வர் வருகையால் சரி செய்யப்படும் சாலைகள்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 6, 7-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அதற்கான முன்னேற்பாடு சாலை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்டமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் சந்திக்க உள்ளார்.

News February 3, 2025

இந்து முன்னணி நிர்வாகி வீட்டு சிறை; நெல்லையில் பரபரப்பு

image

திருப்பரங்குன்றம் மலையை மீட்க இந்து முன்னணி சார்பில் நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில் போராட்டத்திற்கு தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னெச்சரிக்கையான இன்று நெல்லை டவுனில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதனை மாநகர போலீசார் வீட்டில் சிறை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. போராட்டத்திற்கு செல்வதாக அறிவித்த பிற முக்கிய தலைவர்களும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளனர்.

News February 3, 2025

நெல்லையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 

image

மாநில அரசின் மெத்தன போக்கை கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக கட்சி சார்பில் நாளை (பிப்-04) மாலை 5 மணிக்கு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பாலம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நாகேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்ற உள்ளார் என நெல்லை வடக்கு மாவட்ட பாஜகவின் சார்பில் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்

News February 3, 2025

கழிவு லாரியை ஒப்படைக்க முடியாது – மனு தள்ளுபடி 

image

கேரளாவில் இருந்து நெல்லைக்கு மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து போலீசார் பறிமுதல் செய்த லாரியை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (பிப்.3) தள்ளுபடி செய்தது. இதுபோல மருத்துவக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!